தமிழ்நாடு

சென்னை: கடல் சறுக்கு விளையாட்டால் விபரீதம்; மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழப்பு

சென்னை: கடல் சறுக்கு விளையாட்டால் விபரீதம்; மகளை காப்பாற்ற சென்ற தந்தை உயிரிழப்பு

Sinekadhara

கடல் சறுக்கு விளையாட்டின்போது ராட்சத அலையில் சிக்கிய மகளை காப்பற்ற முயன்ற தந்தை, கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி(55). இவருடைய 11 வயது மகள் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டபோது கடல்அலையின் சீற்றத்தின் காரணமாக ராட்சத அலையில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்றுவதற்காக பாலாஜி கடலில் இறங்கி, தனது மகளை மீட்க முயற்சித்துள்ளார். அப்போது கடலில் சிக்கி மாயமான பாலாஜியின் உடல் திருவான்மியூர் வால்மீகி நகர், சீ வார்டு பீச் ரோட்டில்  கரை ஒதுங்கியுள்ளது.

ஆனால் அந்த சிறுமி உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். தந்தையின் உடலை மீட்டெடுத்த திருவான்மியூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.