தமிழ்நாடு

யானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும் விவசாயிகள்

யானையை விரட்ட ஆபத்தான முறையை கையாளும் விவசாயிகள்

webteam

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் விவசாயிகள், விளைநிலங்களுக்குள் யானைகள் நுழைந்துவிடாமல் தடுக்க ஆபத்தான முறையை கையாண்டு வருகின்றனர். 

விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தொங்கு மின்வேலிகளில், காலி பாட்டில்களை விவசாயிகள் கட்டிவைத்துள்ளனர். அதனால், யானைகள் தோட்டத்திற்குள் நுழைய முற்படும் போது, தொங்கும் மின்வேலியிலுள்ள பாட்டில்கள் ஒன்றோடு ஒன்று மோதி வித்தியாசமான ஒலி எழுப்புகின்றன. அந்த ஒலியை கேட்டவுடன் அங்கிருந்து யானைகள் தப்பியோடிவிடுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். 

ஆனால், இந்த முறை மிகவும் ஆபத்தானது என வன உயிரின ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். மின் அதிர்வு காரணமாக‌ மிரண்டு ஓடும் யானைகளின் கால் மற்றும் தும்பிக்கையில் கண்ணாடி பாட்டில்‌கள் உடைந்து காயம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் கவலைப்படுகின்றனர். தொங்கும் மின் வேலிகளில் பாட்டில்களை கட்டக்கூடாது என விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.