தமிழ்நாடு

லாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு!

லாரியில் கட்டு கட்டாக சிக்கிய கள்ளநோட்டுகள் - மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு!

webteam

மதுரை ரயில் நிலையத்தில் தண்ணீர் கேன் ஏற்றிச் செல்லும் லாரியில் கட்டுக்கட்டாக இருந்த 7 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

மதுரை ரயில் நிலையத்தில் செயல்படும் உணவகங்களுக்கு தண்ணீர் கேன் விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுபவர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி. நேற்று இரவு உணவகங்களுக்கு தண்ணீர் கேன் வழங்கிவிட்டு ரயில் நிலையம் நுழைவாயில் பகுதியில் லாரியை நிறுத்தி வைத்துள்ளார். 

அதைத்தொடர்ந்து இன்று காலையில் பார்த்தபோது லாரியின் மேற்புறம் பார்சல் ஒன்று கிடந்துள்ளது, அதனை திறந்து பார்த்தபோது முறையாக அச்சிடாத 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பூபதி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 7லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கொண்டு பணத்தை லாரியில் பதுக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனால் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

MDU FAKE NOTE