தமிழ்நாடு

ஃபேஸ்புக்கில் போலீஸ் உயரதிகாரிகளை குறிவைக்கும் ஃபேக் ஐடி கும்பல்!

ஃபேஸ்புக்கில் போலீஸ் உயரதிகாரிகளை குறிவைக்கும் ஃபேக் ஐடி கும்பல்!

JustinDurai

நெல்லை போலீஸ் துணை கமிஷனர் அர்ஜுன் சரவணன் தனது பெயரில் ஃபேக் ஐடி தொடங்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.

சமீப நாட்களாக ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இயங்கிவரும் போலீஸ் உயரதிகாரிகள் பெயரில் போலியான ஐடி உருவாக்கி அதனை தவறாக பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் திருச்சி டிஎஸ்பி செந்தில்குமார் பெயரில் ஃபேஸ்புக்கில் இயங்கி வந்த போலி ஐடி ஒன்று அவரது நட்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மெசெஞ்சரில் தொடர்பு கொண்டு பண உதவி தேவைப்படுவதாக கூறி ஆன்லைன் மூலமாக பணம் பெற்றது தெரியவந்தது.

மேலும் சென்னையை சேர்ந்த போலீஸ் அதிகாரி சிவா என்பவரும் தனது பெயரில் யாரோ ஃபேக் ஐடி ஆரம்பித்துள்ளதாகவும் இன்பாக்ஸில் யாராவது பணம் வந்து கேட்டால் கொடுக்க வேண்டாம் எனவும் எச்சரிந்திருந்தார்.

இந்நிலையில் நெல்லை காவல் துணை ஆணையாளரான சரவணன், தனது பெயரில் ஃபேஸ்புக்கில் போலியான ஐடி தொடங்கி நட்பு அழைப்பு அனுப்ப துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலீஸ் உயரதிகாரிகளை குறிவைத்து ஃபேக் ஐடி தொடங்கப்படும் நிகழ்வுகள் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.