தமிழ்நாடு

நாமக்கல் ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு - வாடிக்கையாளர் புகார்

நாமக்கல் ஏ.டி.எம்.மில் கள்ள நோட்டு - வாடிக்கையாளர் புகார்

Rasus

நாமக்கல் எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.மில் கள்ள ரூபாய் நோட்டுகள் வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மின்வாரிய ஊழியரான மூர்த்தி என்பவர், டாக்டர் சங்கரன் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.முக்கு பணம் எடுக்க சென்றுள்ளார். இரு கட்டங்களாக 40 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த அவர், பணத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரணம், ஏ.டி.எம்.மில் இருந்து வெளிவந்த பணத்தில் பத்தாயிரம் ரூபாய் அளவுக்கான நோட்டுகள் கள்ள நோட்டுகள்போல் இருந்துள்ளது. 5 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், கிழிந்து ஒட்டப்பட்ட நிலையிலும், வண்ணம் மாறியிருந்த காரணத்தினாலும் மூர்த்தி, இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து அப்பணத்தை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரிடம் விசாரணை நடத்தினர். இதன்பின் மூர்த்திக்கு அப்பத்தாயிரம் ரூபாய்க்கான மாற்றுப்பணம் வழங்கப்பட்டது.