சாலையோரத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக சான்றிதழ்கள் மூட்டை மூட்டையாக கிடைத்துள்ளன. இது தொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் ரகுபதி உத்தரவின் பேரில் தனிப்படை காவல் துறையினர் சான்றிதழ்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
சான்றிதழ்கள் அனைத்தும் போலியென தெரியவந்த நிலையில், சங்கர் மற்றும் நாகப்பன் ஆகியோரை கைது செய்தனர். முதற்கட்டமாக சங்கர் வீட்டில் இருந்து போலி சான்றிதழ்கள் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலி கல்விச் சான்றிதழ்கள் தயாரிப்பு தொடர்பாக வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு போலி சான்றிதழ் விற்கப்பட்டது என்பது தொடர்பான விசாரணையும் தீவிரமடைந்துள்ளது.