Minister Senthilbalaji py frdk
தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக மோசடி - அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் வழங்கப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகை

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

PT WEB

செய்தியாளர்: V.M.சுப்பையா

கடந்த 2011-ஆம் ஆண்2016-ஆம் ஆண்டுவரை அதிமுக ஆட்சியில் இருந்தபோது, செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உட்பட 47 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு தற்போது, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

court order

இந்த வழக்கின் கூடுதல் குற்றப் பத்திரிகையில், மேலும் 2 ஆயிரத்து 202 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜாராகினர். அவர்களுக்கு கூடுதல் குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்பட்டன.

அப்போது நீதிபதி ஜெயவேல், கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கு நூறு பேர் வீதமாக குற்றப்பத்திரிகையின் நகல்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.

நகல்கள் வழங்கி முடித்த பிறகு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் எனவும் அறிவித்தார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை, வரும் 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்