தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தேர்தல் நடக்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளை 2016 டிசம்பர் 31 வரை தனி அலுவலர்கள் நிர்வாகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் அவர்களது பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தின் போது உள்ளாட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தனி அலுவலர் பதவிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 30-ம் தேதியுடன் தனி அலுவலர் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.