தமிழ்நாடு

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் இயற்கை காய்கறிகள்!

சிங்கப்பூருக்கு ஏற்றுமதியாகும் இயற்கை காய்கறிகள்!

webteam

பெரியகுளம் பகுதியில் இயற்கை விவசாயத்தில் உற்றபத்தியாகும் காய்கறிகளுக்கு சிங்கப்பூரில் அதிக வரவேற்பு உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் நிலத்தடி நீரை பயன்படுத்தி கத்தரி, வெண்டக்காய், தக்காளி, மிளகாய், அவரைக்காய் உள்ளிட்ட அனைத்து  காய்கறிகளும் விளைவிக்கப்படுகின்றது. இதில் இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி, பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்கின்றனர். இயற்கை காய்கறிகள் என்றால் சிங்கப்பூர், மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இயற்கை காய்கறிகள் அதிக வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால் விவசாயிகள் அதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிங்கப்பூர் மலேசிய உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளதை அடுத்து இந்த பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகளை விவசாயிகளின் தோட்டத்திற்கு வந்து காய்கறிகளை தரம்பார்த்து உடனே எடுத்து செல்கின்றனர். எனவே விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைப்பதுடன் காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு செல்லும் போக்குவரத்து செலவும் குறைகின்றது. மேலும் நாள்தோறும் இங்கு உற்பத்தியாகும் காய்கறிகளை மாலையில் மதுரையில் இருந்து சிங்கப்பூர், மலேசிய நாடுகளுக்கு விமானத்தில் ஏற்றி சென்று அடுத்த நாள் காய்கறிகள் சேதம் அடையாமல் அங்கு விற்பனைக்கு வைக்கப்படுவதால் மக்களும் விரும்பி வாங்குகின்றனர். இதனால், பெரியகுளம் பகுதியில் உற்பத்தியாகும் காய்கறிகளுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.