தமிழ்நாடு

சேலம்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவமனை பணியிலிருந்து விலக்கு

சேலம்: கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவமனை பணியிலிருந்து விலக்கு

Veeramani

சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகளுக்கு பணியிலிருந்து விலக்கு தர அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

மதுரையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனா காலத்திலும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் சண்முகப்பிரியா உயிரிழந்தார்.  இதைத்தொடர்ந்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.