விஜயகாந்த்தின் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத் puthiya thalaimurai
தமிழ்நாடு

“அவங்க குடும்பத்துல ஒருத்தரை போல என்னையும் பாத்துப்பார்”- விஜயகாந்த்தின் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத்

விஜயகாந்த்துக்கு கடந்த 6 ஆண்டுகளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்த பிசியோதெரபிஸ்ட் ரகுநாத், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவரை பற்றிய மேன்மையான விஷயங்கள் பலவற்றை தெரிவித்துள்ளார்.

PT WEB

விஜயகாந்துக்கு கடந்த 6 ஆண்டுகளாக பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்தவர், பிசியோதெரபிஸ்ட் ரகுநாத். அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “சில தவறான பழக்கங்களால் விஜயகாந்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று பெரும்பாலானோர் தவறாக பேசுகின்றனர். இது முற்றிலும் மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. அவர் அப்படிப்பட்டவரல்ல.

நடிகர் விஜயகாந்த்

ஒரு காலகட்டத்தில் ஒரே ஆண்டில் 18 படங்கள் வரை கூட நடித்திருக்கிறார். தொடர் உழைப்பு, உடலுக்கு ஓய்வின்மை, தூக்கமின்மை, வீட்டு உணவை தவிர்த்தது உள்ளிட்டவையே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதற்கான காரணம்.

இளமையில் மிகக்கடுமையாக பணி செய்வது, ஓய்வெடுக்காமல் இருப்பது என்றெல்லாம் இருந்துள்ளார் விஜயகாந்த். இப்படியான செயல்கள் நாட்கள் செல்ல செல்ல உடல்நலனை பாதிக்கும் என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

விஜயகாந்த்தின் பிசியோதெரபிஸ்ட் ரகுநாத்

அதே போல் அவரால் சத்தமாக பேச முடியாதே ஒழிய, கடைசி நிமிடம் வரை சுயநினைவுடன் பேசிக் கொண்டும், ஒவ்வொரு முடிவுகளையும் எடுத்துக் கொண்டும் இருந்தார்.

அவர் ஏதோ கடந்த சில ஆண்டுகளாகவே பேசவோ, முடிவெடுக்கவோ இயலாத நிலையில் இருந்தார் என்று தவறாக புரிந்து கொள்கின்றனர். அது எதுவுமே உண்மை அல்ல.

சகாப்தம்! இறுதிப் பயணத்தில்...

கடந்த 6 மாதங்களுக்கு முன்புவரை கூட மற்றவர் உதவியோடு நடந்து கொண்டும், உடற்பயிற்சி, பிசியோ செய்து கொண்டும்தான் இருந்தார். விஜயகாந்த் என்னை அவருடைய ஒரு குடும்ப உறுப்பினரைப் போல் பார்த்துக் கொண்டவர். நடிகர், கட்சித் தலைவர் என்ற எண்ணத்தில் யாரையும் அனுகுபவர் அல்ல அவர். கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரையும் கண்ணியமாக நடத்துபவர். நான் கேட்காமலேயே என் மகனுக்கு கல்வி உதவி செய்தவர்” என்று தெரிவித்தார்