தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதிகளில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

webteam

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதிகளில் திட்டமிடப்பட்ட அகழாய்வு கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம்  தொடங்கி வைத்தார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பகுதியைப் பொறுத்தவரை இது 6ம் கட்ட அகழாய்வாகும். இதற்கு முன்னர் 1876, 1902, 1905, 2004, 2005 ஆகிய வருடங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் வெளிநாட்டினர் மற்றும் மத்திய தொல்லியல் துறை சார்பாக நடந்தது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக 6ம் கட்ட அகழாய்வு பணியானது தொடங்கியுள்ளது. சிவகளையை பொறுத்த வரை இந்த அகழாய்வு தான் முதன்முறையாகும்.

இது குறித்து தெரிவித்துள்ள தொல்லியல் துறை சிவகளைப் பகுதி இயக்குநர் பிரபாகரன், ''ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளைப் பகுதிகளில் தமிழ்நாடு தொல்லியியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளோம்.

10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட ஊர்மக்களைப் பயன்படுத்தி செப்டம்பர் மாதம் வரை இந்தப் பணிகள் நடத்த உள்ளோம். 2900 ஆண்டுக்கு முன்னதாக உள்ள இந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை ஆய்வு செய்தால் மேலும் பின்னோக்கி உள்ள காலமா எனக் கண்டறிய வாய்ப்புள்ளது.இந்தப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.31 லட்சம் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது'' எனத் தெரிவித்துள்ளார்.