தமிழ்நாடு

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..!

விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு: முன்ஜாமீன் கோரினார் உமா..!

Rasus

விடைத்தாள் மறுமதிப்பீடு விவகாரத்தில் முன்ஜாமீன் கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாத தேர்வின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் பத்தாயிரம் ரூபாய் லஞ்சமாக பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண் வழங்கினர் என்பது இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியையும் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளருமான உமா, உதவி பேராசிரியர் அன்புச்செல்வன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. முன்ஜாமின் கோரியுள்ள மனு மீது வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.