Vijayabaskar pt desk
தமிழ்நாடு

“இஸ்லாமியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது” – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

“இஸ்லாமியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு வஞ்சித்து விட்டது” என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டினார்.

PT WEB

திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக பொருளாளர் ஜாவித் அகமது தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் பெஞ்ஜமின், விஜய பாஸ்கர் மற்றும் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Vijay baskar

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்களின் முக்கிய கடமையான இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பேசும்போது,

“சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது, கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியது, செய்யக்கூடாது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

Iftar - Vijayabaskar

திமுக ஆட்சி தேர்தல் அறிக்கையில், ‘நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமியர்களை விடுதலை செய்வோம்’ என கூறியிருந்தது. ஆனால், தேர்தல் அறிக்கையில் கூறியது போல் சிறையில் வாழும் இஸ்லாமியர்களை விடுவிக்க இப்போதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இஸ்லாமியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டது. இதே போல தேர்தல் அறிக்கையில் கூறிய பல விஷயங்களை செய்யாமல் திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது” என விமர்சனம் செய்தார்.