சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம மரணம் pt desk
தமிழ்நாடு

ஈரோடு: போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம மரணம் - போலீசார் விசாரணை

ஈரோடு அருகே போக்குவரத்துக் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக அன்பழகன் (52) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது குடும்பத்தினர் பவானி காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர் கடந்த 15 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை முளியனூரில் உள்ள அன்பழகன் வீட்டின் முன்புறம் காம்பவுண்ட்டில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் விழுந்து இறந்து கிடப்பதாக பொதுமக்கள் அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இறந்து கிடந்தது சிறப்பு உதவி ஆய்வாளர் அன்பழகன் என்பது தெரியவந்தது. மேலும் சடலம் அழுகி இருந்ததால் அவர் இறந்து இரண்டு நாட்கள் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சடலத்தை மீட்ட அம்மாபேட்டை போலீசார், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை செய்து வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு உள்ளே செல்லும் போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.