பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் கைது pt desk
தமிழ்நாடு

ஈரோடு | பெண்ணிடம் அநாகரீகமாக அத்துமீறல்.. காவல்நிலையத்திலேயே போதையில் அட்டூழியம் செய்த காவலர் கைது!

ஈரோடு அருகே பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் கைது செய்யப்பட்டார்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அத்தாணியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் பவானிசாகர் காவல்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இவர், அந்தியூர் அருகே வசித்து வரும் பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பொது இடத்தில் அந்தப் பெண்ணை கட்டிப்பிடித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர் கைது

இதனைக் கண்ட பொதுமக்கள் அந்தியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலரை தடுத்து சட்டையை கிழித்து பணி செய்யவிடாமல் தடுத்துள்ளார் கார்த்தி. மேலும் உடன் சென்ற பெண் காவலர்களை தகாத வார்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனையடுத்து கார்த்தியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர், மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து கார்த்தியை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.