தமிழ்நாடு

ஈரோடு: மதுக்கூடமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை - பெண்கள் அவதி

ஈரோடு: மதுக்கூடமாக மாறிய தாய்மார்கள் பாலூட்டும் அறை - பெண்கள் அவதி

kaleelrahman

தாளவாடி பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை  மதுகுடிப்போர் ஆக்கிரமித்ததால் கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் அவதியடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலைப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், பொங்கலை முன்னிட்டு சத்தியமங்கலம், கோவை மற்றும் ஈரோட்டில் வசிக்கும் பெண்கள் தங்களது சொந்த ஊரான தாளவாடிக்கு வருகின்றனர்.

இந்நிலையில், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் இளைப்பாறுவதற்கும் குழந்தைகளுக்கு பாலுட்டுவதற்கும் கட்டப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறை, கடந்த சில வாரங்களாக மது அருந்தும் கூடமாகவும் மதுகுடிப்போர் தூங்கும் அறையாகவும் மாறிவிட்டது.

இதனால் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள் இந்த அறையை பயன்படுத்த முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். இது குறித்கது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொங்கல் திருநாளில் பாலூட்டும் பெண்கள் இளைப்பாற ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.