தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: கடைசி கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் - தீவிர வாகன சோதனையில் போலீசார்

ஈரோடு இடைத்தேர்தல்: கடைசி கட்ட பரப்புரையில் வேட்பாளர்கள் - தீவிர வாகன சோதனையில் போலீசார்

webteam

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வெளியூர்களிலிருந்து வரும் வாகனங்கள் ஈரோடு தொகுதிக்குள் நுழையும்ஈ தண்ணீர் பந்தல் பாளையம் கனி ராவுத்தர் குளம் ஆகிய பகுதியில் போலீசார் தற்காலிக முகாம் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய துணை ராணுவ படையினர் உதவியுடன் நடைபெறும் இந்த வாகன தணிக்கையில் வாகனத்தின் பதிவு எண் உரிமையாளர் பெயர் மற்றும் செல்போன் எண்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனத்தில் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் தணிக்கை செய்யப்பட்ட பிறகே எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றனர். தேர்தலுக்கு இரண்டு தினங்களே உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனங்கள் அனைத்தும் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.