ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை pt desk
தமிழ்நாடு

ஈரோடு | கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை – தாயும் சேயும் நலம்

ஈரோட்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பி.பெ அக்ரஹாரம் பகுதியில் முகேஷ்-சங்கீதா தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த சங்கீதாவிற்கு நள்ளிரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி சங்கீதாவை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

GH

ஆப்போது வீட்டில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சங்கீதாவிற்கு பிரசவ வலி அதிகமாகியது. இதனையடுத்து ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால மருத்துவ உதவியாளர் புஷ்பராஜ் ஓட்டுநர் ஸ்பார்ஜன் உதவியுடன் சங்கீதாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதைத் தொடர்ந்து தாய் மற்றும் சேயை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இக்கட்டான நிலையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேயை காப்பாற்றிய அவசர கால மருத்துவ உதவியாளர் புஷ்பராஜ் மற்றும் ஓட்டுநர் ஸ்பார்ஜனை பலரும் பாராட்டினர்.