ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை pt desk
தமிழ்நாடு

ஈரோடு: மலை கிராம கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை

ஈரோடு அருகே மலைகிராம கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி அதிகமான நிலையில், 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போதே சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அடுத்த தாளக்கரை மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - சின்னத்தாய் தம்பதியினர். கர்ப்பிணியாக இருந்த சின்னத்தாய்க்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னத்தாயை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கமுத்து, சதீஷ்குமார்

அப்போது சின்னத்தாய்க்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸை சாலையோரம் நிறுத்தி சின்னத்தாய்க்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதில், சுகப் பிரசவத்தில் சின்னத்தாய்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து தேவையான முதற்கட்ட மருத்துவ உதவிகளை செய்த 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புநர் அங்கமுத்து, தாய் மற்றும் சேயை பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

இதைத் தொடர்ந்து தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இக்கட்டான சூழலில் சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால மருத்துவ நுட்புநர் அங்கமுத்து மற்றும் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோரை பலரும் பாராட்டினர்.