தமிழ்நாடு

ஈரோடு: மக்கள் விரோத மத்திய அரசு நீடிக்கக் கூடாது - திருப்பூர் எம்பி கே.சுப்பராயன்

ஈரோடு: மக்கள் விரோத மத்திய அரசு நீடிக்கக் கூடாது - திருப்பூர் எம்பி கே.சுப்பராயன்

kaleelrahman

நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி பிரதமர் மோடி என்று திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்

ஈரோட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஏஐடியுசி-யின் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.சுப்ராயன், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள்.

ஆனால், மோடி அரசு மடியில் கணம் இருப்பதால் வழியில் பயப்படுகிறது. மத்திய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. உடனே ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க வேண்டும். நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி மோடி” என்று குற்றம் சாட்டினார். 

மேலும் பேசிய அவர், “மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்தில் பயன்படுத்தும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும். முறைகேடுகளை செய்வதற்காகவே திட்டங்கள் தீட்டிய அரசு அதிமுக அரசு. ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை தமிழக அரசு நிறுத்தி விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.