செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு ஒப்பந்ததாரர்கள் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் மோகன் பாபுவிற்கு லஞ்சம் கொடுப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டார்.
இதில் உதவி செயற்பொறியாளரிடம் இருந்து 58 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 10.46 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கு காட்டப்படாததால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.