தமிழ்நாடு

ஈரோடு: சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு!

ஈரோடு: சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவே பதுங்கியிருந்த 6 அடி நீள நாகப்பாம்பு!

kaleelrahman

ஈரோட்டில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கட்டுமான பொருட்கள் வைக்கப்படிருந்த அறையில் நுழைந்த 6 அடி நீள நாகப்பாம்பை, பாம்புபிடி வீரர் உயிருடன் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

ஈரோடு அடுத்த சேனாதிபாளையம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு புதியதாக அமைக்கப்பட்ட வீட்டுமனை ஒன்றில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சிமெண்ட் மூட்டைகள் இருப்பு வைக்க தற்காலிகமாக குடிசை அமைக்கப்பட்டிருந்தது.

இந்த குடிசையில் இருந்த சிமெண்ட் மூட்டைகளை பணியாளர்கள் எடுக்க முயன்றனர். அப்போது அங்கு பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பார்த்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.

இதனை தொடர்ந்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் யுவராஜ் சிமெண்ட் மூட்டைகளுக்கு நடுவில் பதுங்கியிருந்த 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார்.

பின்னர் பிடிபட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.