Police suspended pt desk
தமிழ்நாடு

ஈரோடு: பறிமுதல் செய்த குட்காவை பதுக்கி வைத்து பேரம் பேசியதாக 2 போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட்

ஈரோடு மாவட்டம் பவானியில் வாகன சோதனையில் பிடிபட்ட குட்காவை பதுக்கி வைத்து பேரம் பேசியதாக எழுந்த புகாரில் 2 போக்குவரத்து காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

webteam

ஈரோடு மாவட்டம் பவானியில் போக்குவரத்து காவலர்கள் பிரபு, சிவகுமார் ஆகியோர் கடந்த 12ஆம் தேதி இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை ஆய்வு செய்த போது, அதில் குட்கா பொருட்கள் இருந்தது அவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதை பறிமுதல் செய்த அவர்கள், நாமக்கல் மாவட்டம் வெப்படையில் ரகசியமாக அவற்றை பதுக்கி வைத்துக்கொண்டு, விடுவிக்க பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

District SP

இதையடுத்து குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்யவும் காவலர்கள் இருவரையும் ஆயுதப் படைக்கு மாற்றவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டார். இது தொடர்பாக பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இரு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்து காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார்.

குட்காவை கடத்தி வந்தவர் மற்றும் அதன் உரிமையாளர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.