EPS ptweb
தமிழ்நாடு

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த கருத்துக் கேட்புக் கூட்டம் - இபிஎஸ் குற்றச்சாட்டும்... அரசின் விளக்கமும்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்புகளையும் அழைக்கவில்லை என்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டை, தமிழக அரசு மறுத்துள்ளது.

PT WEB

மத்திய அரசு உத்தேசித்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு கருத்து கேட்டு வருகிறது. சென்னையில் நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் குறித்து தமிழக அரசுக்கு மக்களவை செயலகம் தெரிவித்திருந்தது. அந்தக் கூட்டத்துக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை அழைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் குறித்த கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு மத்திய அரசின் சிறுபான்மையினர் அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதில் மாநில அரசு பிரதிநிதிகள், வக்ஃப் வாரியம், மாநில சிறுபான்மையினர் ஆணையம், இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் பங்கேற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் பிரதிநிதிகள், பார்கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், முத்தவல்லி மற்றும் உலமா அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்று கருத்து தெரிவித்தனர். சென்னையில் கருத்து கேட்பு நடத்துவற்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளித்தது. இக்கூட்டத்திற்கு ஒருசில இஸ்லாமிய அமைப்புகளை அழைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது உண்மைக்கு மாறானது” என தமிழக அரசு கூறி உள்ளது