தமிழ்நாடு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமலாக்கத்துறை சம்மன்

kaleelrahman

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 7 பேருக்கு இந்திய அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 ஆம் வரை 7 நாட்கள் தனித்தனியாக விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

2001 - 2006 காலகட்டத்தில் அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் கால்நடை மற்றும் வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 90 இலட்சம் அளவிற்கு சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்திருந்தது.

இவ்வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய அமலாக்கத் துறை சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.