தமிழ்நாடு

பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்

webteam

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும், வருகிற 11 ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த காலத்தில், செந்தில் பாலாஜி போக்குவரத்துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக 3 வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்தனர். அதில் ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்நிலையில் மேலும் உள்ள பண மோசடி 2 வழக்குகளை மையமாக வைத்து தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வருகிற 11-ம்தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.