தருமபுரி மாவட்டம் அரூர் அரசுப் பள்ளியில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி நவீன கழிப்பிடம் கட்டாததால் அதனை திறந்துவைக்காமல் ஒப்பந்ததாரரை எச்சரித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் திரும்பிச் சென்றார்.
அரூர் அரசுப் பள்ளியில் நவீன கழிப்பிடம் கட்ட நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் அதனை திறந்துவைக்க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சென்றார். அப்போது அவசர கதியில் பணிகள் முடிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி நவீன முறையில் கட்டப்படாததால் திறந்துவைக்க மறுப்பு தெரிவித்த செந்தில்குமார், விரைவாக அனைத்து பணிகளையும் முடிக்கும்படி கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.