மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம், சட்ட விரோதமானதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசரச் சட்டம், சட்ட விரோதமானதல்ல என தெரிவித்துவிட்டது. அத்துடன் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது ஒருவரது சட்டப்படியான உரிமையே; அடிப்படை உரிமை அல்ல எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் மனுதாரர் மேல்முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.