தமிழ்நாடு

அவசர பயணத்திற்கான அனுமதிச்சீட்டு: புது அறிவிப்பு!

அவசர பயணத்திற்கான அனுமதிச்சீட்டு: புது அறிவிப்பு!

webteam

அவசர தேவைக்கான பயண அனுமதி சீட்டை இணையதளத்தில் மட்டுமே பெற முடியும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

ஊரடங்கு காலத்தில் வெளியூர்களுக்கு செல்ல அவசர தேவை ஏற்பட்டால் அவசர அனுமதி சீட்டு பெறலாம் என சென்னை மாநகராட்சி ஏற்கெனவே அறிவித்து இருந்தது. அதாவது முன்கூட்டியே நிச்சயம் செய்த திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை(ரத்த சொந்தங்களுக்கு மட்டும்), எதிர்பாரா விதமான மரணம் (ரத்த சொந்தங்களுக்கு மட்டும்) ஆகிய காரணங்களுக்காக மக்கள் அவசர அனுமதி சீட்டு பெற்று, வெளிமாவட்டங்கள் அல்லது வெளி மாநிலங்களுக்கு பயணம் செய்யலாம். இதற்காக பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்கு நேரில் சென்று வந்தனர்.

இந்நிலையில் பயண அனுமதி சீட்டை இணையதளத்தில் மட்டுமே பெற முடியும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, அவசர பயண அனுமதி சீட்டு வழங்கும் அதிகாரம் மாநில E-pass கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்டுள்ளதால் http://tnepass.tnega.org/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அனுமதி சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு யாரும் நேரில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.