தமிழ்நாடு

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினாவில் யானை சிலைகள் அமைப்பு

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு மெரினாவில் யானை சிலைகள் அமைப்பு

webteam

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் யானைகள் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் பெரிதும் பொதுமக்களையும் சிறுவர்களையும் கவர்ந்துள்ளது.

உண்ணிச் செடிகள் என்ற அந்நிய களைத் தாவரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட யானை சிலைகள் சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகே வைக்கப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் இந்த சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை செயலாளர் சுப்ரியா ஸாஹு உள்ளிட்டோர் பொதுமக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தனர்.

இந்த யானை சிலைகள் மலைவாழ் பழங்குடி மக்களால் தத்துரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. உயிருடன் இருக்கும் யானைகளின் அடிப்படையாகக் கொண்டு அதன் சிலைகள் களைத் தாவரங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலில் யானைகளின் பங்களிப்பு மற்றும் அவற்றின் வாழ்வியலை விளக்கும் வகையில் இந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த களைச் செடிகளால் 6 யானை சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த யானைகளை இன்றிலிருந்து வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிட வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவில் இருக்கும் 30 ஆயிரம் யானைகளில் சுமார் 10 சதவீதம், அதாவது 3000 யானைகள் தமிழகத்தில் இருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.