தமிழ்நாடு

ஆக்ரோஷமான திருப்பரங்குன்றம் யானை.... திருச்சி உயிரின வனப்பகுதிக்கு மாற்றம்

ஆக்ரோஷமான திருப்பரங்குன்றம் யானை.... திருச்சி உயிரின வனப்பகுதிக்கு மாற்றம்

PT

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் யானை திருச்சி உயிரின வனப் பகுதிக்கு அனுப்பப்பட்டது.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் யானை ‘தெய்வானை’ இன்று அதிகாலை 3 மணி அளவில் திருச்சி உயிரின வனப் பகுதிக்கு உரிய வனத்துறை வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 24-ந் தேதி மாலையில் திருப்பரங்குன்றம் கோயில் யானையான தெய்வானையை யானையின் துணைப் பாகன் குளிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது யானை அவரை ஆக்ரோஷப்பட்டுத் தாக்கியது. இதில் காளிதாஸ் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து யானை ‘தெய்வானை’ மருத்துவக் குழு கட்டுப்பாட்டுற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தெய்வானை சீரான நிலைக்கு திரும்பியதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் யானையை பார்வையிட்டனர். அவர்கள் யானை தெய்வானையை வன பகுதியில் விடுவதற்கு முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று இரவு கோயிலுக்கு யானைகளை ஏற்றி செல்லக் கூடிய வனத்துறை சிறப்பு வாகனத்துடன் வன உயிரின அதிகாரிகள்  இன்று அதிகாலையில் திருச்சி அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தில் அமைந்துள்ள உயிரின வனப்பகுதியில் யானையை விட்டனர்.