தமிழ்நாடு

குரங்கு அருவியில் இனி யானை ச‌வாரி செய்யலாம்

குரங்கு அருவியில் இனி யானை ச‌வாரி செய்யலாம்

webteam

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில் வனத்துறை சார்பாக சுற்றுலா பயணிகள் யானை ச‌வாரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீலகரி மாவட்டம் முதுமலை மற்றும் கோவை மாவட்டம் டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் யானை சவாரி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை ஆழியார் மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகள் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த பகுதிகளாகும். இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.சுற்றுலா தளத்தை மேம்படுத்தும் விதமாகவும்  குரங்கு அருவி அருகே வனத்துறை சார்பில் யானை சவாரியை துவக்க திட்டமிடப்பட்டிருந்தது.

முதல் கட்டமாக டாப்சிலிப் பகுதியிலிருந்து இரண்டு யானைகள் அழைத்து வரப்பட்டன. டாப்சிலிப் முகாமில் 23 யானைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மூன்று யானைகள் அங்கு யானை சவாரிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது துவங்கப்பட்டுள்ள யானை சவாரிக்கு இரண்டு யானைகள் அழைத்துவரப்படுள்ளன. குரங்கு அருவியில் இருந்து நவமலை செல்லும் வழியாக அரை மணி நேர சவாரிக்கு தலா ரூ.200 வீதம் வசூலிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.