தமிழ்நாடு

பொள்ளாச்சியில் களைகட்டிய ‘யானைப் பொங்கல்’

பொள்ளாச்சியில் களைகட்டிய ‘யானைப் பொங்கல்’

webteam

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் சார்பில் டாப்சிலிப்பில் யானைப் பொங்கல் கொண்டாடபட்டது.

பொள்ளாச்சியில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்குப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக சின்னதம்பி உட்பட 18 வளர்ப்பு யானைகள் கோழிகமுத்தி முகாமில் இருந்து டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்பட்டன. அவற்றிற்கு மாலை அணிவித்து அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்கள் சார்பில் புது பானையில் பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அத்துடன் யானைக்குப் பிடித்த வாழைப்பழம், கரும்பு, தேங்காய் மற்றும் பொங்கல் உள்ளிட்டவைகள் உணவாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததுடன், அவர்களும் யானைகளுக்கு கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்டவற்றை உணவாக வழங்கி மகிழ்ந்தனர். இதைத்தொடர்ந்து யானைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. டாப்சிலிப்பில் உள்ள புல் மலையில் யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்ததுடன், சுற்றுலா பயணிகளைப் பார்த்து ஒரே நேரத்தில் துதிக்கையை தூக்கி பிளிறின. இதைக்கண்ட சுற்றுலா பயணிகள் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர்.