தெய்வானை யானை pt web
தமிழ்நாடு

'சாப்பிட்டயா?'.. தலையை அசைத்த தெய்வானை யானை.. கண்ணில் தெரிந்த சோகம்!

திருச்செந்தூர் கோயில் யானை தெய்வானை மூன்று தினங்களுக்கு பின் இன்று குளிக்க வைக்கப்பட்டது. இயல்பாக உணவுகளையும் உண்டது.

PT WEB

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 18 ஆம்தேதி நடந்த அசம்பாவித சம்பவம் பக்தர்களின் மனதை விட்டு அகலவில்லை. கோயிலில் பராமரிக்கப்படும் தெய்வானை யானை, பாகன் உதயகுமாரையும், அவரது உறவினர் சிசுபாலனையும் கொன்றது. இந்த நிலையில் யானை கால்நடை மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

பாகன் உதயகுமார்

பாகன் இறந்த பிறகு சோகத்தில் இருந்த யானை, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மூன்று தினங்களுக்கு பிறகு தெய்வானை யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் குளிப்பாட்டப்பட்டது. அப்போது யானை தனது தும்பிக்கையால் உற்சாகமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து மகிழ்ந்தது. அதை தொடர்ந்து யானைக்கு உணவாக நவதானியம், புற்கள், பழங்கள் வழங்கப்பட்டது.

யானை உணவு முடித்த பின் வனத்துறை மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள் தெய்வானை யானையினை ஆய்வு செய்தனர். அப்போது யானையே பார்த்து மருத்துவர் ஒருவர் நன்றாக சாப்பிட்டாயா என்று கேட்டார். அதற்கு தெய்வானை யானை உற்சாகமாக தலை ஆட்டியது. இது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சோகத்தில் இருந்து மீளும் திருச்செந்தூர் யானை தெய்வானை!

தெய்வானை யானை தனது பாகன் இறந்த பின்னர் மிகவும் சோகமாக இருந்தது, அழுதது. ஆனால் தற்போது யானை நடந்து கொண்ட விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் யானை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளும். தற்போது இந்த சூழலில் யானை 3 தினங்களாக வெளியே அழைத்துச் செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.