தமிழ்நாடு

ஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது

ஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் இறப்பது குறைந்தது

webteam

2016ஆம் ஆண்டை விட 2017 ஆண்டில் கூடலூ மற்றும் ஊட்டியில் யானை தாக்கி மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்துள்ளது.

கூடலூர் மற்றும் ஊட்டி வடக்கு வனக்கோட்டங்களில் யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு யானை தாக்கி 15 பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் பயனாக 2017 ஆம் ஆண்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்துள்ளது. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்ததும், இறப்புகள் குறைய முக்கிய காரணம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.