தமிழ்நாடு

காவல்நிலையத்துக்கு 2 மணிநேரம் மின்சாரம் கட் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

காவல்நிலையத்துக்கு 2 மணிநேரம் மின்சாரம் கட் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

webteam

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கூமாப்பட்டியில், மின்வாரிய ஊழியர் சைமன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாததுடன், அதில் 3 பேர் வந்ததால் சைமனின் வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன், உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்வயரை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதனால் காவல்நிலையத்தில் 2 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் போனது. பின்னர் மின் இணைப்பு தரப்பட்டது. இதுகுறித்து கூமாபட்டி உதவி காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையிட்டதை அடுத்து, அவர் விசாரணை நடத்தி வருகிறார்.