தமிழ்நாடு

இயங்காத ஆலைக்கு மின்கட்டணம் கோரி நோட்டீஸ் - உரிமையாளர் அதிர்ச்சி

இயங்காத ஆலைக்கு மின்கட்டணம் கோரி நோட்டீஸ் - உரிமையாளர் அதிர்ச்சி

webteam

கரூரில் ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் இயங்காத தொழிற்சாலைக்கு மின்சார கட்டணம் செலுத்தக் கோரி அனுப்பப்பட்ட ‌நோட்டீசை ரத்து செய்ய‌ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

கரூரில் நூற்றுக்கும் அதிகமான கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊரடங்கால் இங்குள்ள தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், கொசுவலை தொழிற்சாலை ஒன்றுக்கு ஏப்ரல் மாதத்திற்கான மின்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று மின்‌வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த மார்ச் 26 ஆம் தேதியில் இருந்து ஆலை மூடப்பட்டுள்ள நிலையில், மின்கட்டணம் கட்டக்கோரி நோட்டீஸ் வந்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மின் பயனீட்டு அளவை கணக்கெடுக்க முடியாத காரணத்தால் பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கீடு அடிப்படையில் அதே தொகையை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

தொழிற்சாலைகள் இயங்காத காலத்திற்கான மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆலை உரிமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.