தமிழ்நாடு

மின்கட்டண உயர்வு: வாக்களித்தவர்களுக்கு திமுக கொடுத்துள்ள பரிசு – கடம்பூர் ராஜூ

மின்கட்டண உயர்வு: வாக்களித்தவர்களுக்கு திமுக கொடுத்துள்ள பரிசு – கடம்பூர் ராஜூ

webteam

தமிழகத்தில் சொத்துவரி மற்றும் மின் கட்டணம் உயர்வு வாக்காளர்களுக்கு திமுக கொடுத்துள்ள பரிசு என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான கடம்பூர் ராஜு கூறுகையில்...

தமிழகத்தில் நடைபெறும் பிரச்னைகளை பார்த்தால் இலங்கையை போல் மாறும் சூழ்நிலை உள்ளது அப்படி மாறும்பட்சத்தில் திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் அதிமுக-வின் கடந்த 5 ஆண்டு காலத்தில் சினிமா துறை சுதந்திரமாக இயங்கி வந்தது

அதைபோல் அதிமுக ஆட்சியில் 2017-ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற இண்டெர்நேஷனல் சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் சூழ்நிலை இருந்தது.

அதிமுக ஆட்சியில் திரைப்படத்துறை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து காணப்பட்டது. ஆனால், இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன்ட் மூவிஸை சுற்றி காணப்படுகிறது. திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார். அவரது கட்டுபாட்டில் தான் சினிமா துறை உள்ளது என்று திரையுலகமே இன்று குற்றம் சாட்டுகின்றது.

சினிமா துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பதாக தெரியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் திரைத்துறை அழிவு பாதையை நோக்கி செல்கிறது என்று குற்றம் சாட்டிய அவர் தொடர்ந்து...

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை கலவரத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு நீதிமன்றமே கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அரசு வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் அமைச்சர் வேலு செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த கலவரத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை என கூறிய கருத்திற்கு இன்னும் இந்த கலவரம் அவருக்கு போதாதா? கலவரத்தை அவர் பாராட்டுகிறாரா என கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.