மின்சார ரயில் சேவை ரத்து முகநூல்
தமிழ்நாடு

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து!

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ்

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மாநகரப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை கடற்கரை, எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு சிறப்பு ரயில்களும், தாம்பரத்திற்கு 14 சிறப்பு ரயில்களும் இரு வழித்தடங்களிலும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது சென்னை வாசிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்களில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன..

இதனை ஈடு செய்யும் விதமாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, எழும்பூர் ரயில் நிலையத்தில் 6 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.