தமிழ்நாடு

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை

webteam

ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கான எந்த அரசுத் துறையைச் சேர்ந்த வாகனங்களும் நுழைய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆர்.கே.நகரில் அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் யாருடைய வாகனமாக இருந்தாலும் தயக்கமின்றி சோதனையிட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றும் காவல் துறை கூடுதல் ஆணையர், கா‌வல் ஆய்வாளர்கள், மாநகராட்சி துணை பொறியாளர் முதல் செயற் பொறியாளர் வரை அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். துணை தேர்தல் அதிகாரி‌ மற்றும் அதற்குக் குறைவான பதவி வகிக்கும் அதிகாரிகளும் இடமாற்ற உத்தரவுக்கு ஆளாகியுள்ளனர். ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு கூடுதலாக 5 பார்வையாளர்களை நியமித்தும் தேர்தல்‌ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், மொத்த தேர்தல் பார்வையாளர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பறக்கும் படையினர் ஜிபிஎஸ் கண்காணிப்பின்கீழ் செயல்படுவார்கள் என்றும், அவர்களுடன் மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்கள் ‌பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.