தமிழ்நாடு

"இன்று மாலைக்குள் விளக்கம் தேவை”- உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

"இன்று மாலைக்குள் விளக்கம் தேவை”- உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

Rasus

முன்னாள் மத்திய அமைச்சர்களான அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிகுள் விளக்கமளிக்கும்படி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாரதிய ஜனதாவின் புகார் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில், கடந்த மாதம் 31-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் இருவரும் பிரதமர் மோடியின் அழுத்தம் தாங்காமல் உயிரிழந்ததாக பேசியதாக கூறப்பட்டுள்ளது.

இது தனிமனித விமர்சனம் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாக இருப்பதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. எனவே தன்னுடைய பேச்சு குறித்து இன்று மாலைக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அளித்துள்ள தேர்தல் ஆணையம், அவ்வாறு செய்யத் தவறினால் அவரை கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.