தமிழ்நாடு

இடைத்தேர்தலுக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை - தேர்தல் ஆணையம் கிடிக்கிப்பிடி

webteam

நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, கண்காணிப்பை மேற்கொள்ள வருமானவரித்துறை பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரியில் காமராஜ் நகர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடை‌பெறுகிறது. தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருள்கள் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில், வருமானவரித்துறை பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. 

அக்டோபர் 21-ஆம் தேதி வரை 24 மணி நேரமும் இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். தனி நபரோ அல்லது கட்சியோ, நேரடியாகவோ மறைமுகமாகவோ, பணம் அல்லது இலவசங்களை விநியோகித்தாலோ, தூண்டினாலோ இந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம். 

1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், itcontrol@gov.in என்ற இ-மெயில் முகவரியிலும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்கலாம். மேலும் 044-28271915 என்ற எண்ணிலும், 94454 67707 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் புகார்களை அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.