தமிழ்நாடு

‌“ஆசிரியர்கள் சொத்து விவரங்களை பராமரிக்க பதிவேடு” - பள்ளிக்கல்வி உத்தரவு

‌“ஆசிரியர்கள் சொத்து விவரங்களை பராமரிக்க பதிவேடு” - பள்ளிக்கல்வி உத்தரவு

webteam

அரசுப் பள்ளிகளில் ‌பணியாற்றுபவர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ள‌து. 

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பிற பணியாளர்களின் அசையும், மற்றும் அசையா சொத்துக்களை முறையாக பதிவேட்டில் பராமரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதில் ஏதேனும் முரண்பாடுகள் நிகழ்ந்தால், ‌சம்மந்தப்பட்ட பணியாளர் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்‌ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களை முதன்மைக் கல்வி அலுவலர்கள் வகுத்து, துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

இதேபோல், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைப் போன்று, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் ‌பயோ மெட்ரிக் வருகைப் ‌பதிவேட்டை பின்பற்ற வேண்டும் என சார்நிலை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.