தமிழ்நாடு

வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - முதல்வர் பழனிசாமி 

வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை - முதல்வர் பழனிசாமி 

webteam

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. 29 தொழில்கள் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் பல தொழில்கள் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

தமிழக அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. திமுக ஆட்சியின் போது எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சி காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்?. திமுக ஆட்சி காலத்தில் தொழில் முதலீடு ரூ. 26 ஆயிரம் கோடிதான். ஆனால் அதிமுக ஆட்சியில் ரூ. 2 லட்சம் கோடிக்குமேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. 

ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். குறுகிய எண்ணம் கொண்ட ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுதலுக்குரியதுதான். அனைத்து மாநில முதல்வர்களும் வெளிநாடு பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவது ஸ்டாலினால் பொறுத்துகொள்ள முடியவில்லை. ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய்” எனத் தெரிவித்தார். 

முன்னதாக வெளிநாடுகளில் முதலீடுகளைப் பெறப் போவதாகக் கூறிச் சென்ற முதலமைச்சர், வெறுங்கையுடன் திரும்பியிருப்பதாக ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.