செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்க கூடாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சுயாட்சி தன்மையை காக்கும் வகையில் அதை வேறு எந்த பல்கலைக்கழகத்துடனும் இணைக்கும் முடிவு இருந்தால் அதை கைவிட வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை வலுப்படுத்துவதே சிறப்பானதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் கூறியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கான கட்டடம் கட்ட தமிழக அரசு 17 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளதையும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.