தமிழ்நாடு

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு ரத்து

kaleelrahman

நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சார்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேட்டியின் போது தெரிவித்தார்.

இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் தமிழக அரசு ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் அமிர்தம் ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் தொடர்ந்தது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசியல் கட்சியினர் மீது பதிவான அவதூறு வழக்குகளை திரும்பப்பெறுவது என முடிவெடுத்துள்ளதாக கூறி அதற்கான அரசாணைகளை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இருவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்துசெய்து தீர்ப்பளித்தார்.