தமிழ்நாடு

நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி

நூல் விலை உயர்வால் தொழிலாளர்கள் பாதிப்பு - எடப்பாடி பழனிசாமி

Sinekadhara

பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப் பொருளாக இருக்கும் நூலின் விலை உயர்ந்து வரும் நிலையில், அதனை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 10 மாதங்களில் அனைத்து நூல் ரகங்களின் விலையும் கிலோவிற்கு 120 ரூபாய் வரை உயர்ந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, நூலிற்கு மானியம் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நூல் மற்றும் பஞ்சுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும் நிலையில் அதனை முழுமையாக ரத்துசெய்ய ஜிஎஸ்டி கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.