தமிழ்நாடு

பாய்ந்தது காவிரி ! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்

பாய்ந்தது காவிரி ! மேட்டூர் அணையை திறந்து வைத்தார் முதல்வர்

webteam

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என கூறியிருந்த நிலையில் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 

 நேற்று கோவையில் பேசிய முதல்வர்,  காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தண்ணீர் திறக்கப்படும் என கூறியிருந்தார். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், உபரிநீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது. தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் 105 அடியாக உள்ளது. நீர்வரத்து 1 லட்சத்து 4 ஆயிரம் கன அடியிலிருந்து 1 லட்சத்து 8 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 80,000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. நீரின் கொள்ளவு 70 டிஎம்சி யாக உள்ளது. குடிநீருக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை 10;30 அளவில் மேட்டூர் அணையை பாசனத்திற்காக மலர் துவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேட்டூர் அணை கட்டப்பட்ட்டு 84 ஆண்டுகள் ஆன நிலையில், மேட்டூர் அணையை திறந்து விட்ட முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான். இதுவரை எந்த முதல்வரும் நேரில் சென்று திறந்துவிட்டதில்லை எனபது குறிப்பிடத்தக்கது. முதல்கட்டமாக 2 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்று மாலைக்குள் 20அயிரம் கன அடிக்கு உயர்த்தப்படும் என தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர், மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.