ஆ.ராசா pt web
தமிழ்நாடு

சிக்கலுக்கு மேல் சிக்கல்... ஆ.ராசாவுக்கு சொந்தமான 15 இடங்களுக்கு சீல் வைத்த ED

கோவையில் திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு சொந்தமான இடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

PT WEB

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு சொந்தமான 15 அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான Kovai Shelters promotors india private limited நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆ.ராசாவின் 15 சொத்துகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். கோவை சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 15 இடங்களுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகள், நில அளவைத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுமார் ரூ.5.85 கோடி மதிப்புள்ள 40 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்து அமலாக்கத்துறை அதனை முடக்கியுள்ளது. அதற்கான அறிவிப்பு பலகை வைத்து நோட்டீஸும் ஒட்டப்பட்டுள்ளது.